கப்பலிலிருந்து தடுமாறி விழுந்து இந்திய சர்வேயர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: துபாயில், கப்பலில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த சர்வேயர், கால் தடுமாறி விழுந்து உயிரிழந்தார்.
லாயிட்ஸ் ரெஜிஸ்டர் ஆப் ஷிப்பிங் நிறுவனத்தில் சர்வேயராகப் பணியாற்றி வந்தவர் விஸ்வநாதன். வெள்ளிக்கிழமை இவர் துபாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த எம்.டி. பிரேம் திவ்யா என்ற கப்பலில் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
கப்பலில் உள்ள ஒரு டேங்க்கை அவர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் துபாய் போலீஸார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications