எல்டிடிஇ ஆதரவாளரின் வங்கிக் கணக்குகளை ஆராயும் சிபிஐ!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் ஓடி விட்டது. இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்ட சிபிஐ தற்போது ராஜீவ் கொலை தொடர்பான விசாரணையை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யும் குமரன் பத்மநாபன் என்பவருக்கு ஜெர்மனி வங்கிகளில் கணக்கு உள்ளது. அதுகுறித்த விவரங்களை அறிய தற்போது சிபிஐ குழு ஒன்று ஜெர்மனியில் முகாமிட்டுள்ளது.
கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படுபவர் குமரன் பத்நாபன். இவருடைய பண விநியோகம் குறித்து சிபிஐக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவேதான் இவருடைய வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை ஜெர்மனி அதிகாரிகளிடம் சிபிஐ கோரியுள்ளது.
இதேபோல சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் இதுதொடர்பாக சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில் சிபிஐ குழு பெர்லின் பயணம் மேற்கொண்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான சில முக்கிய விவரங்கள் தொடர்பாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐயின் இந்தப் புதிய விசாரணை மூலம் ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் சிபிஐ கையில் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications