பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரே நடந்த போராட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து
கொண்டனர்.
அப்போது பெண்கள் நடுச்சாலையில் விறகு அடுப்பு எரித்து சமையல் செய்து நூதன முறையில் எதிர்ப்பைக் காட்டினர். ஆண்கள் காஸ் சிலிண்டர்களை (காலி சிலிண்டரைத்தான்) தலையில் தூக்கிச் சுமந்தபடி காணப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் சுலோச்சனா சம்பத் தலைமையிலும், வேலூரில் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் பொன்னையன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.
இதேபோல தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் விறகு அடுப்புகளை எரித்தும், சிலிண்டர்களை தலையில் சுமந்தபடியும், மாட்டு வண்டிகளில் பைக்குகளை ஏற்றி ஓட்டியும் நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications