மாமல்லபுரம் கடலில் சீற்றம்-ஊருக்குள் நீர் புகுந்தது
சென்னை: மாமல்லபுரத்தில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மாலை 5 மணியளவில் கடற்கரைக் கோவில் பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
ராட்சத அலைகள் எழுந்ததால் அங்கு பீதி ஏற்பட்டது. அலைகள் கிட்டத்தட்ட 15 அடிக்கு மேல் எழுந்ததால், கடல் நீர் கரையைத் தாண்டி 100 அடி தூரத்திற்கு உள்ளே புகுந்தது. கடற்கரைக் கோவில் உள்ள பகுதியில் பெரிய பெரிய கற்கள் போடப்பட்டிருப்பதால் கோவிலுக்குள் நீர் புகவில்லை.
இந்த திடீர் சீற்றம் மற்றும் கடல் நீர் புகுந்ததால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 படகுகள் சேதமடைந்தன. கட்டுமரங்களில் போடப்பட்டிருந்த மீன் பிடி வலைகள் உள்ளிட்டவையும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.
கிட்டத்தட்ட கால் மணிநேரத்திற்கு கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications