விஜயன் கொலை-ராஜேந்திரன், லதா, குமார் ஜாமீன் மனு வாபஸ்
சென்னை: எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆகியோர் தாங்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனக்ய
விஜயனுக்கும், அவரது மனைவி சுதாவின் அக்காள் லதாவின் கணவர் ராஜேந்திரனுக்கும் இடையே எம்ஜிஆரின் சொத்துக்களை நிர்வகிப்பதில் தகராறு இருந்து வந்தது.
இந் நிலையில் சுதா போலீசில் கொடுத்த புகாரில், இந்தக் கொலைக்கு ராஜேந்திரன், அவரது மனைவி லதா, மகன் குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடு்த்து போலீசார் அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தனர். இந் நிலையில், ராஜநேதிரன் குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திரன்-லதா-குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அதில், கடந்த 4ம் தேதியே தங்களை போலீசார் கைது செய்து விட்டதாகவும், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இதையடுத்து இந்த மூவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து சுதாவின் சார்பில் வழக்கறிஞர் மனு செய்தார்.
இந்த மனுக்கள் முதன்மை செசன்ஸ் நீதிபதி அருணா ஜெகதீசன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது ராஜேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், 3 ஜாமீன் மனுக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாகக் கூறிவிட்டார்.
இந்த ஜாமீன் மனுக்களை வாபஸ் பெறப்பட்டதன் மூலம் ராஜேந்திரன், மனைவி, மகன் மூவரும் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
மகாபலிபுரத்தில் கூலிப்படை பதுங்கல்?:
இதற்கிடையே விஜயனைக் கொலை செய்த கூலிப் படையைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் கொலையாளிகள் பயன்படுத்திய கார் டிரைவர் சுந்தரவேல் என்பவரை பிடித்துள்ளனர்.
இவர் தந்த தகவலின் அடிப்படையில் கூலிப்படையை சேர்ந்த மேலும் 3 பேர் மகாபலிபுரத்தில் பதுங்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
அங்குள்ள லாட்ஜ்கள், பண்ணை வீடுகளில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு்ள்ளனர். வாகன சோதனைகளும் நடந்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications