ரயில்வே ஊழியரின் துரித செயல்-பெரும் விபத்து தவிர்ப்பு
கரூர்: கரூர் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது. இது குறித்து ரயில்வே ஊழியர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தந்ததால் பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கரூர்-திருச்சி இடையே சானபிராட்டி கிராமம் அருகே வழக்கமான தண்டவாள சோதனையில் ரயில்வே ஊழியரான பழனிச்சாமி ஈடுபட்டிருந்தார். அப்போது தண்டவாளத்தில் மேலே சென்றே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து கீழே கிடப்பதைக் கண்டு திடு்க்கிட்டார்.
இதையடுத்து உடனடியாக கரூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தந்து கொண்டிருந்தபோதே கரூர்-திருச்சி பாசஞ்சர் ரயில் வருவதைக் கண்டார்.
உடனடியாக சிவப்பு கொடியுடன் ரயிலை நோக்கி ஓடினார். இதைக் கண்ட ரயிலின் டிரைவர் அதை உடனே நிறுத்தினார். இதனால் அந்த மின் கம்பிக்கு 400 மீ்ட்டர் தொலைவிலேயே ரயில் நின்றுவிட்டது.
அந்த மின்கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், ரயிலை நிறுத்தியதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து தமிழக மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து வந்து கம்பியை அகற்றினர். இதையடுத்தே அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து சீரானது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications