ஜெயலலிதாவுடன் சந்திப்பு?- ஜி.கே.மணி மறுப்பு
ஊட்டி: ஜெயலலிதாவை நான் சந்திக்க ஊட்டிக்கு வரவில்லை என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
அதிமுக பிரமுகரின் மகளுக்கும் மணியின் மகனுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்தத் திருமணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் பங்கேற்கவுள்ளனர்.
இது அதிமுக-பாமக இடையிலான கூட்டணி முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இப்போது ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் ஊட்டியில் ஓய்வில் இருந்து வருகிறார். இந் நிலையில் ஜி.கே.மணி ஊட்டி வந்தார். அவர் ஜெயலலிதாவை சந்திக்கவே வந்ததாக செய்தி பரவியது.
இந் நிலையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் பொறியியல் மற்றும் தன்னாட்சி கல்லூரி நிறுவனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வங்கிக் கடன் தடையின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை திமுகவுடன் கூட்டணி தொடரும்.
எனது மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்தை எங்கு எப்போது நடத்துவது என்பது பற்றி ஆலோசனை தான் நடத்தி வருகிறோம். இன்னும் அழைப்பிதழ் கூட அச்சடிக்கப்படவில்லை.
அதற்குள் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பத்திரிக்கை கொடுக்க உள்ளதாக செய்தி பரவி இருக்கிறது. இது உண்மைக்கு மாறான தகவல்.
ஜெயலலிதாவை சந்திப்பதற்காக நான் ஊட்டிக்கு வரவில்லை என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications