என்.எல்.சியில் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கும் அபாயம்
சென்னை: சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால் என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளனர். அவர்களுக்கு நிரந்தர ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால், என்.எல்.சியில் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
என்.எல்.சி. எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிலையத்தில் வேலை பார்த்து வரும் 12 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களும் கடந்த 10 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகத்துடன் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி தரவில்லை.
முத்தரப்பு பேச்சு தோல்வி:
இந்த நிலையில்,நேற்று சென்னை சாஸ்திரி பவனில் நெய்வேலி நிர்வாகம், ஊழியர்கள் சங்கம் மற்றும் மத்திய தொழிலாளர் ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பெண்களின் தெருமுனைப் பிரசாரம்:
இதன் ஒரு கட்டமாக, தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பெரும் திரளாக சென்று, நெய்வேலியில் தெருமுனைப் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். நெய்வேலி மக்களை தங்களுக்கு ஆதரவாக திரட்டி வருகின்றனர்.
வருகிற 13ம் தேதி என்.எல்.சி.யை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர். அதே தினத்தன்றுதான் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்கு வருமாறு மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பொகார்டியா அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரந்தர ஊழியர்களும் போராட முடிவு:
இந்த நிலையில், ஒப்பந்த ஊழியர்களின் போராட்டத்திற்கு நிரந்தர ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால், பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதுதொடர்பாக அங்கீகாரம் பெற்ற நிரந்தர ஊழியர்களின் தொழிற்சங்கங்களான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பாட்டாளி தொழிலாளர் சங்கம் ஆகியவை நேற்று தனித்தனியாக கூடி ஆலோசித்தன.
அதன் முடிவில், ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது என்றும், ஒப்பந்த ஊழியர்களுக்காக போராட்டத்தில் குதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல, சி.ஐ.டி.யூ. சார்பில் நிரந்தர ஊழியர்களின் இன்னொரு கூட்டம் நடந்தது. நடந்த கூட்டத்திற்கு சங்க செயலாளர் வேல் முருகன் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யூ. சங்கம், எச்.எம்.எஸ்., ஐ.ன்.டி.யூ.சி. தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐக்கிய ஜனதாதளம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. லெனின் சாரணி அமைப்பு கலந்து கொண்டன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வேல்முருகன் கூறுகையில், என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நிரந்தர தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போதெல்லாம் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆதரவு கொடுத்தார்கள். எனவே ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்துக்கு நிரந்தர தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு முழு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். சங்க தலைமை நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆலோசித்து வேலை நிறுத்த தேதியை அறிவிப்போம் என்றார்.
இதன் காரணமாக நெய்வேலியில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. மேலும், தற்போது நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முற்றிலும் நின்று போயுள்ளது. கையிருப்பும் வெகுவாக குறைந்து விட்டது. எனவே இன்று முதல் நெய்வேலியில், மின்உற்பத்தி அடியோடு பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தென் மாநிலங்கள் இருளில் மூழ்கும்:
முதல் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். தற்போது 130 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
2-வது அனல் மின் நிலையம் 1,470 மெகாவாட் தயாரிக்க கூடிய திறன் கொண்டது. தற்போது 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. முதல் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் 420 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். தற்போது 100 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
2-வது அனல் மின் நிலையத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும். தற்போது 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதால் 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே அனுப்பப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மின் விநியோகத்தில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு 3 அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும். மின் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டுள்ளதால் மின் சப்ளையும் குறைந்துள்ளது.
இன்னும் 24 மணி நேரத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் நீடித்தால் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும்.
வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம்:
இதற்கிடையே, என்.எல்.சி.ஸ்டிரைக்கால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டால் அதை சமாளிக்க வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்க தமிழக மின்வாரியம் தீர்மானித்துள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications