இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட முருகன் சிலை மீட்பு
சென்னை: லங்கையில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் முருகன் சிலை மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கதிர்காமத்திலிருந்து இந்த சிலை தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டது. ஒரு அடி உயரமுள்ள 300 ஆண்டுகள் பழமையான இந்த முருகன் சிலையை தமிழகத்தில் ஒரு கும்பல் பதுக்கி வைத்திருப்பதும், அதை விற்க முயன்று வருவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து ஐ.ஜி. திரிபாதி, டி.ஐ.ஜி. ஆறுமுகம் ஆகியோர் மேற்பார்வையில், துணை எஸ்பி விநாயகம், இன்ஸ்பெக்டர்கள் காதர்பாஷா, ஜான் கிளமண்ட் ஆகியோர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
இந்தப் படை ரகசிய விசாரணையில் ஈடுபட்டு சிலையை விற்க முயன்று வந்த சீனிவாசன் (58) என்பவரை அடையாளம் கண்டது. அவரை புரோக்கர்கள் வேடத்தில் போலீசார் நெருங்கி சிலைக்கு விலை பேசினர்.
சிலைக்கு ரூ.20 லட்சம் விலை பேசிய சீனிவாசன், நாமக்கல் பஸ் நிலையத்தில் வைத்து டீலிங்கை முடிக்கலாம் என்றார்.
இதையடுத்து சிலையை சாக்குமூட்டையில் கட்டிக்கொண்டு நாமக்கல் பஸ் நிலையத்திற்கு வந்தார் சீனிவாசன். அங்கு மாறுவேடத்தில் இருந்த தனிப்படை போலீசார் அவரை மடக்கினர். சிலையை மீட்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த சிலையை யாரோ இலங்கையில் இருந்து கடத்தி வந்து நாமக்கல்லை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணிடம் தந்துள்ளனர். சரஸ்வதி இதை சீனிவாசனிடம் கொடுத்துவிட்டு இறந்துபோனார். இதனால் இந்த விஷயத்தில் இப்போது சீனிவாசன் மட்டுமே சிக்கியுள்ளார்.
இந்தியாவுக்குள் சிலையை கடத்தி வந்த கும்பல் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
கருடாழ்வார் சிலை மீட்பு:
இதேபோல, 3 ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டம் ஆனைக்கட்டி கிராமத்தில் உள்ள லட்சுமணபெருமாள் கோவிலில் திருட்டு போன கருடாழ்வார் ஐம்பொன் சிலையும் தனிப்படை போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. ஐம்பொன்னால் ஆன இந்தச் சிலையின் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.
சிலையை திருடி விற்க முயன்ற தென்னரசு (25) என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது கூட்டாளிகளான ராமர், பெருமாள், குருநாதன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்க 2 சிலைகளையும் மீட்ட தனிப் படையினரை கூடுதல் டி.ஜி.பி. நடராஜ், ஐ.ஜி. திரிபாதி, டி.ஐ.ஜி. ஆறுமுகம் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications