சட்டசபை சிபிஎம் தலைவர் கோவிந்தசாமியின் பதவி பறிப்பு
சென்னை: சட்டசபை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து கோவிந்தசாமி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் பாலபாரதி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் தொகுதி சிபிஎம் எம்.எல்.ஏ கோவிந்தசாமி. சட்டசபை கட்சித் தலைவராகவும் இருந்து வந்தார். துணைத் தலைவராக மதுரை கிழக்கு நன்மாறனும், கொறடாவாக திண்டுக்கல் பாலபாரதியும் இருந்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு சிபிஎம் மாநிலக் குழுக்கூட்டம் நடந்தது. இதில், கோவிந்தசாமி மீது சரமாரியாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவிந்தசாமியின் தலைவர் பதவி பறிக்கப்பட்டு அவருக்குப் பதில் பாலபாரதி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணை தலைவராக நன்மாறனும், கொறடாவாக பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ மகேந்திரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கோவிந்தசாமி நடந்து கொண்டதால் மாநில குழுவில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக மாநில செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிந்தசாமியின் திடீர் நீக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications