நளினி: மனு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, அத்தண்டனையை உச்சநீதிமன்றம ஆயுள்தண்டனையாக மாற்றியது. இதையடுத்து அவர் கடந்த 17 ஆண்டுகளாக வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றுகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார் நளினி.
இதுகுறித்து நளினி தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 17 ஆண்டுகளாக வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை தமிழக அரசு விடுதலைசெய்து வருகிறது. அதேபோல கருணை அடிப்படையில் என்னையும் விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை நீதிபதி பரிசீலித்து அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் சுவாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் வாதிடுகையில், நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று கோரினார்.
நளினியின் வக்கீல் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று கோரப்பட்டது. இதையடுத்து ஜூன் 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்குள் தமிழக அரசும், மத்திய அரசும் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications