பொன்னாடைக்கு பதில் கிடைத்த புத்தகங்கள்:மாணவர்களுக்கு வழங்கிய அமைச்சர்
ஈரோடு: தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவுக்கு அரசு, கட்சி விழாக்களில் பொன்னாடைகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள நோட்டு, புத்தகங்கள் மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
அமைச்சராக பதவி ஏற்றது முதல் கட்சி நிர்வாகிகள் யாரும் தனக்கு பொன்னாடை, மாலைகள் அணிவிக்க வேண்டாம் அதற்கு பதிலாக நோட்டு, புத்தகங்கள் வழங்கும்படி கூறி வந்தார்.
மீறி யாராவது தனக்கு மாலையோ அல்லது பொன்னாடையோ அணிவித்தால் அதற்கு அபராதம் வசூலித்து வந்தார்.
இந்த வகையில் அமைச்சரிடம் ரூ. 7.5 லட்சம் மதிப்புக்கு நோட்டு, புத்தகங்கள் குவிந்தன. அபராத தொகையாகவும் ரூ. 25,000 வசூலானது.
இந்த அபராத தொகையில் பேனா, பென்சில், ரப்பர், பை, வாய்ப்பாடு ஜியோமெண்டரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார் அமைச்சர்.
இதையடுத்து இந்த நோட்டு, புத்தகங்கள் மற்றும் பொருட்களை தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வைத்து ஏழை, எளிய குழந்தைகளுக்கு வழங்கினார்.
ஈரோடு மேயர் குமார் முருகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இவற்றை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். இதன்மூலம் 2,000 மாணவ-மாணவிகள் பயன் பெற்றனர்.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
"ரோல் நம்பர் என்னுடையது.. ஆனா பேப்பர் வேறொருவருடையது!" CBSE விடைத்தாள் நகலை பார்த்து உறைந்த மாணவன் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications