12வது நாளில் 2வது திருமணம்-கணவன் மீது பெண் புகார்
சேலம்: காதல் திருமணம் நடந்த 12 நாட்களில் மனைவியை கழற்றிவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணை மணக்க முயன்ற கணவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் தாமரை செல்வி (18). இவருக்கும் திருமலைகிரியை சேர்ந்த சாமிதுரைக்கும் (21) மூன்று மாதங்களுக்கு முன் காதல் மலர்ந்தது.
இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 1ம் தேதி வீட்டை ஓடி போளூர் விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
வலசையூர் அருகில் குடும்பம் நடத்தி வந்தனர். இந் நிலையில் சாமிதுரை, தாமரை செல்வியை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று பாட்டி வீட்டில் தங்க வைத்தார்.
பிறகு வந்து அழைத்துச் செல்வதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை. இந் நிலையில் சாமிதுரைக்கு வேறு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளில் அவரது வீட்டார் ஈடுபட்டனர்.
சாமிதுரைக்கும், அவரது உறவினர் வீட்டு பெண்ணுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இதையறிந்த தாமரைசெல்வி சேலம் டிஐஜியிடம் நேரில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு சாமிதுரையிடம் விசாரணை நடத்தினர். மேலும் இன்று காலை நடக்க இருந்த இரண்டாவது திருமணமும் நிறுத்தப்பட்டது.
தாமரை செல்விக்கும், சாமிதுரைக்கும் திருமணம் நடந்து 12 நாட்களே ஆகிறது என்பது குறிப்பிடதக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications