சேரனிடம் பணியாற்றிய உதவி இயக்குனர் 'மாயம்'!
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மகேந்திரன் (31) என்பவர் காணாமல் போயுள்ளார்.
சேரனுடன் பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப் போன்ற படங்களில் பணியாற்றிய இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழையூர். இவர் சென்னையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். ஆனால் வீட்டுக்கு வரவில்லை.
மகேந்திரனின் பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளார். எங்கு சென்றார் என்ற தகவலும் தெரியவில்லை.
இதையடுத்து மகேந்திரனின் தந்தை ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications