என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.750 ஊதி உயர்வு
டெல்லி: டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.750 சம்பள உயர்வு அளிக்க நெய்வேலி அனல் மின் நிலைய நிர்வாகம் ஒப்புக் கொண்டது. தொழிலாளர்களின் முக்கியமான கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல், சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவ வசதி, போனஸ் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மறியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 13 நாட்களாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து மத்திய அரசு, தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்வந்தது. இந்தப் பேச்சு வாத்தை நேற்று டெல்லியில் நடந்தது. மத்திய நிலக்கரித்துறை மந்திரி சந்தோஷ் பகோர்டியா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் என்.எல்.சி. நிர்வாகம், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதலில் இருதரப்பினருடனும் தனித் தனியாக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருதரப்பையும் ஒன்றாக அமர வைத்துப் பேசினார்.
என்.எல்.சி. சார்பில் செயல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிரசன்ன குமார், பணியாளர் துறை இயக்குனர் பாபுராவ், நிலக்கரித்துறை அமைச்சக செயலாளர் ஹரிஷ் சந்திர குப்தா, தொழிற்சங்கத்தினர் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, எம்.பி.சுப்புராயன், மகாதேவன், ஜீவா தொழிற் சங்க பொதுச் செயலாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிற்பகலில், தி.மு.க. தொழிற் சங்கம் சார்பில் குப்புசாமி எம்.பி., சி.ஐ.டி.யூ. சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன், பா.ம.க. தொழிற்சங்கம் சார்பில் பொன்னுசாமி எம்.பி., உள்ளிட்டோர் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிர்வாகத்தினர், மத்திய இணை மந்திரி சந்தோஷ் பகோர்டியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்வைத்த 9 அம்ச கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை என்.எல்.சி. நிர்வாகம் ஏற்றுக்கொள்வதாக ஒப்புக் கொண்டது.
அதன்படி, பணி நிரந்தரம் கோரும் ஒப்பந்த தொழிலாளர்கள் இனி தொழிற்சாலை சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
1995-ம் ஆண்டு தொழிற்சாலை கூட்டுறவு சங்கத்தில் முதல் கட்டமாக 1,000 ஒப்பந்த தொழிலாளர்கள் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டனர். அவர்களில் 250 பேர் பணி மூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்பட்டனர். பின்னர் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது பேச்சு வார்த்தையின்போது, இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும், முதல் கட்டமாக 5,000 ஒப்பந்த தொழிலாளர்களை பணி மூப்பு அடிப்படையில் உறுப்பினர்களாக சேர்க்கவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும், வருடந்தோறும் பணியில் இருந்து நிரந்தர தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது காலியாகும் இடங்களில், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.
நெய்வேலியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நிரந்த தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும்.
இதேபோல், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ரூ.750 சம்பள உயர்வு அளிக்கப்படும்.
இதையடுத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொகோர்டியா கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் குறித்து ஜீவா தொழிற்சங்க பொதுச் செயலாளர் சேகர் கூறுகையில், வாய்மொழியாக நிர்வாகம் அளித்துள்ள உறுதிமொழிகளை சட்டப்பூர்வ ஒப்பந்தமாக்கி நிறைவேற்றுவது குறித்து வருகிற 16ம் தேதி மத்திய தலைமைத் தொழிலாளர் நலத்துறை ஆணையர் மொஹோபாத்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். சட்டப்பூர்வமாக, ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்வரை ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications