பொதுமக்கள் அதிருப்தி: ஹோட்டல் 'மீல்ஸ்' அளவு அதிகரிப்பு
சென்னை: பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளதன் எதிரொலியாக ஹோட்டல்களில் வழங்கப்படும் அளவுச் சாப்பாட்டின் அளவு அதிகரிக்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தமிழக ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களின் விலை குறைக்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.
அதன்படி அனைத்து சாப்பாடுகளின் விலையும் ஓரளவு குறைக்கப்பட்டது. ஆனால் ரூ. 30க்கு வழங்கப்படும் அளவுச் சாப்பாட்டின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. மேலும் ஊறுகாய் கூட வைக்கவில்ைல என்று பொதுமக்கள் குமுறல் வெளியிட்டனர்.
விலை குறைப்பு என்ற ெபயரில் திருப்தி இல்லாத அளவுக்கு சாப்பாடு தருவதாக பொதுமக்கள் பெருமம் அதிருப்தி அடைந்தன்.
இதையடுத்து தற்போது அளவுச் சாப்பாட்டில் வழங்கப்படும் சாதத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவர் வசந்த பவன் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவின் தரம், சுவை, அளவு குறையவில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், அளவுச் சாப்பாட்டில் சாதத்தின் அளவை சற்று அதிகரித்தால் மேலும் பயனடைவோம் என்ற கருத்தினை பத்திரிக்கையாளர்கள் உள்பட பலர் கேட்டுக் கொண்டனர்.
அதன் படி, உணவு அமைச்சர்கேட்டுக் கொண்டதின் பேரில், ஞாயிற்றுக்கிழமை முதல் அளவுச்சாப்பாட்டில் சாதத்தின் அளவை அதிகரித்து 300 கிராம் வழங்கப்படும் என சங்கம் தீர்மானித்துள்ளது என்று கூறியுள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications