விமானத்தில் திடீர் கோளாறு-தப்பினர் ரோஜா, பயணிகள்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: நடிகையும், தெலுங்குதேச மகளிர் அணித் தலைவியுமான ரோஜா பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் திருப்பதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இந்தியன் விமானம் ஒன்று 144 பேருடன் ஹைதராபாத்திலிருந்து டெல்லிக்கு நேற்று சென்றது. அதில், நடிகை ரோஜா, உள்ளூர் தெலுங்கு தேச தலைவர் எர்ரபள்ளி தயாகர ராவ், திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை தலைவர் கருணாகர ரெட்டி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் பலத்த சப்தம் கேட்டது. இதனால் விமானம் தடுமாறியது, கரும்புகையும் அதிக அளவில் வெளியானது.
இதனால் விமானத்திற்குள் இருந்தவர்கள் பதட்டமடைந்தனர். உடனடியாக விமானி அருகிலிருந்த திருப்பதிக்கு விமானத்தை திருப்பினார். பலத்த பாதுகாப்புடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்தே பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ரோஜா பதட்டத்துடன் கூறுகையில், டமார் என்று பெரும் சப்தம் கேட்டது. வெடி விபத்து போல அது இருந்தது. காதே செவிடாகி விடும் அளவுக்கு சத்தம் பயங்கரமாக இருந்தது.
ஜன்னல் வழியாக பார்த்த போது, தரைப்பகுதியில் மக்கள் பீதியில் ஓடுவதை பார்த்தேன். ஆனால் இது சாதாரண கோளாறுதான் என்று விமான அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி













Click it and Unblock the Notifications