விலை உயர்வு எதிரொலி-டீசலுடன் கெரசின் கலப்பு!

Subscribe to Oneindia Tamil

Lorry
நெல்லை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, டீசலுடன் மண்ணெண்ணை கலந்து ஓட்ட ஆரம்பித்துள்ளனர் நெல்லை லாரி டிரைவர்கள்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. இதனை தொடர்ந்து லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வாடகையும் உயர்த்தப்பட்டன.

தற்போது டீசல் விலை உயர்வின் காரணமாக வாகன ஒட்டுநர்கள் வாடகை கட்டுபடியாகாத காரணத்தினால் தங்களது வாகனங்களுக்கு டீசலோடு மண்ணெண்ணெயும் கலந்து வாகனங்களை இயக்க தொடங்கிவிட்டனர்.

1 லிட்டர் டீசல் விலை ரூ.37, ஆனால் ரேசன் கடைகளில் வினியோகிக்கப்படும் 1 லிட்டர் மண்எண்ணெய் ரூ.9.50க்கு வாங்கும் பொதுமக்கள் அந்த மண்ணெண்ணெயை கள்ள சந்தை வியாபாரிகளிடம் லிட்டருக்கு ரூ.20க்கு விற்கின்றனர்.

இதனை வாங்கும் மொத்த வியாபாரிகள் தமிழக-கேரள எல்லையான நெல்லை மாவட்டம் கட்டளைகுடியிருப்பு, புளியரை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சரக்கு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு 1 லிட்டர் ரூ.25க்கு விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து,

திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை புதூர் பகுதியில் நின்றுக் கொண்டிருந்த லாரிகளில் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் அந்தோணி முத்து தலைமையில் துணை தாசில்தார் ஆறுமுகம், கடத்தல் தடுப்பு சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சுடலையாண்டி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது லாரிகளில் விற்பனை செய்வதற்காக 10 கேன்களில் மண்ணெண்ணெயோடு நின்றுக் கொண்டிருந்த வாலிபர் செய்யது அலி பாதுஷா என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து சுமார் 100 லிட்டர் மண்எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தமிழக-கேரள டீசல் விலை உயர்வால் மண்எண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளது குறித்து லாரி டிரைவர் ஒருவர் கூறுகையில், தூத்துக்குடியிலிருந்து கொல்லம்-கொச்சி வரை போகிறோம். சிலசமயம் வாகன பழுது ஏற்பட்டு விடுவதால் செலவு கூடிவிடுகிறது.

அதனால் டீசலுக்கு பதில் மண்எண்ணெயை மிக்ஸிங் செய்வதன் மூலம் செலவு குறைவதால் இப்படி செய்கிறோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+