குடிகார தந்தை-மாணவி சுடுகாட்டில் தஞ்சம்
புளியங்குடி: குடித்து விட்டு அடித்துத் துன்புறுத்தும் தந்தையின் கொடுைக்குப் பயந்து சுடுகாட்டில் தங்கிய மாணவியை போலீஸார் மீட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகேயுள்ள வடநத்தம்பட்டி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு பால்துரை என்ற மகனும், பரிமளா, பானுபிரியா என்ற மகளும் உள்ளனர். பரிமளா வீரசிகாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டை விட்டு மாயமானார்.
உறவினர்கள் வீடுகளில் தேடிய மாடசாமி பின்னர் சேர்ந்தமரம் போலீசில் கடந்த 13ம் தேதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் கலைமணி மற்றும் போலீசார் மாணவி பரிமாளாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் சேர்ந்தமரம் அருகேயுள்ள பெரியசாமிபுரம் சுடுகாட்டு பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தினசரி வந்து தங்குவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது சுடுகாட்டில் தங்கி செல்வது மாயமான மாணவி பரிமளா என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மாணவி பரிமளா போலீஸ் நிலையத்தில் கூறியதாவது,
நான் வீரசிகாமணியில் 10ம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை என்னை கட்டிட வேலைக்கு அனுப்புவதுடன் குடித்துவிட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்தார். இதனால் நான் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
அடிக்கடி இது போன்ற சம்பவம் நடப்பதால் மிகுந்த மனவேதனை அடைந்த நான் யாரிடமும் சொல்லாமல் மதுரைக்கு சென்று விட்டேன். பின் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன்.
இந்நிலையில் மீண்டும் ஊருக்கு செல்ல விரும்பி சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தேன். ஆனால் மீண்டும் தன்னை துன்புறுத்துவார் என நினைத்து பெரியசாமிபுரம் சுடுகாட்டில் தங்கிக் கொண்டு கையிலிருந்த பணம் மூலம் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு வந்தேன். இந்நிலையில் போலீசார் என்னை மீட்டு வந்தனர்.
எனது பெற்றோர் படிக்க வைத்தால் மட்டுமே அவர்களுடன் செல்வேன். இல்லையென்றால் அவர்களுடன் செல்லமாட்டேன் என்றார்.
இதையடுத்து மாடசாமியின் தங்கை ராமசாமியாபுரத்தை சேர்ந்த பட்டத்துரைச்சி, பரிமாளவை நான் படிக்க வைக்கிறேன் என்று கூறவே பெற்றோர் சம்மதத்துடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications