Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுதாவூர் நில அபகரிப்பு-வரதராஜன் சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுதாவூர் நில விவகார ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரித்து வரும் சிவசுப்பிரமணியம் கமிஷன் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

1967ம் ஆண்டு தமிழக அரசால் சிறுதாவூரில் நிலமற்ற தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கு 53 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்நிலத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆக்கிரமித்துக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து நிலத்தை மீட்க மார்க்சிஸ்ட் கட்சியும், விவசாயிகள் சங்கமும் போராட்டம் நடத்தின.

அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் 2006 ஜூலை 27 அன்று தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்தது.

இதனையடுத்து நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து, விசாரணை கமிஷனுக்கு தடை விதிக்க கோரினர். இதனை உச்சநீதிமன்றம் நிராகரித் தது. இதனைத் தொடர்ந்து விசாரணைக் கமிஷன் தனது பணியை செய்து வருகிறது.

20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்துள்ள கமிஷன் முன்பு கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.வைகை, இளங்கோ, சம்கிராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

எதிர்தரப்பில் சசிகலா உறவினர் சித்ரா சார்பில் நவநீதகிருஷ்ணன், எஸ்.வி. கோபால்சாமியின் சார்பில் வழக்கறிஞர் ரவிக்குமாரும், ஸ்ரீராம் பஞ்சுவின் சார்பில் அன்புமணி, ஸ்ரீகாந்த் சார்பில் திருமலைச்சாமி, காஜாமொய்தீன் சார்பில் மனோகர் ஆஜராகி வரதராஜனிடம் குறுக்கு விசாரணை செய்தனர்.

வழக்கறிஞர் நவநீதக் கிருஷ்ணன் குறுக்கு விசாரணை செய்கையில், விசார ணைக் கமிஷன் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் அளித்த அறிக்கையை கொண்டு குறுக்கு விசார ணை செய்ய முற்பட்டார். ஆனால், சான்றளிக்கப்பட்ட நகல், கமிஷன் முன்பு தாக்கல் செய்யாததால், அதனை சமர்ப்பிக்குமாறும், அதன்பின் குறுக்கு விசாரணையை நடத்துமாறும் நீதிபதி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து வரதராஜனிடம் நேற்று குறுக்கு விசாரணை நடைபெறவில்லை.

பின்னர் வெளியே வந்த வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறுதாவூரில் 20 ஏழை பயனாளிகளின் நிலம் பறிக்கப் பட்டு உள்ளது. அதுபற்றி விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. பறிக்கப்பட்ட விவ சாயிகளின் நிலம் என்னென்ன என்று தெரிவித்தோம். தொடர்ந்து விசாரணை நடைபெறும். இறுதியாக தீர்ப்பு வெளிவரும்.

சாதாரண ஏழை-எளிய விவசாயிகளின் நிலத்தை பறித்து வசதி படைத்தவர்களும், ஆக்கிரமிப்பாளர்களும் பங்களா கட்டிக் கொண்டுள்ளனர். விசாரணை முழுமையாக முடிந்தால்தான் மகத்தான உண்மைகள் வெளியே வரும். பல புள்ளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பறிக்கப்பட்ட நிலத்தை மீண்டும் அரசு எடுத்து ஏழை விவசாய தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டும். புறம்போக்கு, நீர்நிலை புறம் போக்கு, குளத்துப் புறம்போக்கு நிலம் என ஆக்கிரமிக்கப்பட்டு பங்களா கட்டியுள்ளதையும் கருத்தில் கொண்டு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினோம். அதில் விசாரணை கமிஷனும் கவனம் செலுத்த கேட்டுக் கொண்டோம் என்றார்.

மற்ற சாட்சிகளிடம் இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெறவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+