குஜ்ஜார்களுக்கு ஓபிசி கோட்டாவில் 5 சதவீத உள் ஒதுக்கீடு!
ஜெய்ப்பூர்: தங்களை பழங்குடியினராக அறிவித்து அதன் கீழ் இட ஒதுக்கீடு கோரி மாபெரும் போராட்டம் நடத்தி, ராஜஸ்தானையே ஸ்தம்பிக்க வைத்த குஜ்ஜார் சமூகத்தினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க ராஜஸ்தான் அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி, பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓபிசி), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (எம்பி-ஓபிசி) குஜ்ஜார் சமூகத்தினர் வகைப்படுத்தப்பட்டு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
இதன் மூலம் பழங்குடியினர் பிரிவாக குஜ்ஜார் சமூகத்தினர் அறிவிக்கப்பட மாட்டார்கள். மாறாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக குஜ்ஜார் சமூகத்தினர் அறிவிக்கப்படுவர்.
குஜ்ஜார் சமூகப் பிரதிநிதிகளுக்கும், ராஜஸ்தான் அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இதுதொடர்பான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான முழு விவரங்களையும் இன்று ராஜஸ்தான் அரசு அறிவிக்கும்.












Click it and Unblock the Notifications