எம்பிபிஎஸ், பிடிஎஸ்- தமிழகத்தில்16000 பேர் விண்ணப்பம்
சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர 16,000 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி உள்ளன. மேலும் இந்த ஆண்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி புதிதாக தொடங்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,483 உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 251 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பங்களை சமர்பிக்க நேற்று கடைசி நாள்.
இந் நிலையில் 16,000 பேர் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு 14,500 பேர் விணணப்பித்திருந்தனர்.
இந்த 16,000 பேரில் பெரும்பாலானவர்கள் பொறியியல் படிப்புக்கும் விண்ணப்பித்திருப்பர் என்று தெரிகிறது. மருத்துவம் கிடைக்காவிட்டால் இவர்கள் பொறியியல் கல்வியில் சேருவர்.
கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்சில் இடம் கிடைத்தும் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அதை வேண்டாம் என்று கூறிவிட்டு பொறியியல் கல்வியில் சேர்ந்தது நினைவுகூறத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications