'அதற்குள் சாப்பாட்டு ஞாபகமா?'
சென்னை:
அன்புமணி மீது எனக்கு அன்பு உண்டு. மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை வெளியேற்றக் கோர மாட்டோம் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
பாமகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றி நிலையில் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை வெளியேற்றக் கோருவீர்களா?
கருணாநிதி: அப்படி நாங்கள் கேட்பதாக இல்லை.
கேள்வி: மத்திய அமைச்சரவையில் பாமக தொடர அனுமதிப்பீர்களா?
கருணாநிதி: அன்புமணி மீது அன்பு உண்டு. அன்புமணிக்கும், எனக்கும், திமுகவிற்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
கேள்வி: ராமதாஸ் மீண்டும் பேசினால் கூட்டணி தொடருமா?
கருணாநிதி: கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது.
கேள்வி: சோனியா காந்தியிடம் பாமகவை வெளியேற்றியதன் காரணம் என்ன என்று கூறுவீர்களா?
கருணாநிதி: அவர்கள் கேட்கவும் இல்லை. சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவும் இல்லை.
கேள்வி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மறப்போம் மன்னிப்போம் என்று கூறி ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
கருணாநிதி: மறப்போம் என்று நான்தான் சொல்ல வேண்டும். அவர் சொல்லக் கூடாது.
கேள்வி: மதச்சார்பற்ற வாக்குகள் பிரியக் கூடாது என்பதற்காக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தினால் பாமகவுடன் மறுபடியும் உறவு தொடருமா?
கருணாநிதி: பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். இந்த விஷயத்தை ராமதாசிடம் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: இந்த முடிவால், ரயில்வே திட்டங்களும், சுகாதார திட்டங்களும் பாதிக்கப்படுமா?
கருணாநிதி: தண்டவாளத்திலிருந்து ரயில் கீழே இறங்கி விடுகிறது என்ற பாதிப்புகளைத் தவிர வேறு எந்த பாதிப்பும் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் ரயில்வே துறையைப் பொறுத்தவரை அங்கே இருக்கின்ற பெரியவர் லல்லுவும் சரி, இங்கேயுள்ள துணை மந்திரியும் சரி, சுகாதாரத்துறை மந்திரியும் சரி நல்லவர்கள் என்பது என் கருத்து.
கேள்வி: ஆடு பகை, குட்டி உறவு என்பது சரிப்பட்டு வருமா?
கருணாநிதி: அதற்குள் சாப்பாட்டு ஞாபகமா?
கேள்வி: பாமகவுக்குப் பதில்வேறு ஏதாவது கட்சி உங்கள் அணிக்கு வருமா?
கருணாநிதி: அப்படிக்கட்சிகள் வந்தே ஆக வேண்டும் என்று எதுவும் இல்லை.
கேள்வி: கூட்டத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் வரவில்லை?
கருணாநிதி: அவர் வெளிநாடு சென்றிருக்கிறார். நேற்றைய தினம் என்னிடம் தொலைபேசியில் பேசினார். புதன்கிழமை (இன்று) சென்னை திரும்புவதாக தெரிவித்தார் என்றார் முதல்வர் கருணாநிதி.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications