அனைத்து மதத்தினர் ஆதரவு இருந்தால் ராமர் கோவில்: அதவானி
டெல்லி: அனைத்து மதத்தினரும் ஆதரவு அளித்தால்தான், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமாகும் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம், கம்மம் மாட்டம் பத்ராச்சலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவததை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தெலுங்குப் படத்தின் இந்தி பதிப்பான ராம் மந்திர் படத்தை நேற்று அத்வானி பார்த்தார்.
படம் பார்த்து முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தப் படத்தில் அனைத்து மதத்தினரின் ஆதரவுடம் இருந்தால்தான் ராமர் கோவிலைக் கட்ட முடியும் என்ற கருத்து அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நான் ஆமோதிக்கிறேன், ஏற்றுக் கொள்கிறேன்.
சமூகத்தில் ஒருவருக்கொருவர் எப்படி சுமூகமாக, இணக்கமாக, நல்லுறவோடு வாழ முடியும் என்பதை இந்தப் படம் தெளிவாக விளக்கியுள்ளது. இதன் காரணமாகவே இப்படம் தெலுங்கில் மிகப் பெறும் வெற்றியைப் பெற்றுள்ளது.
ராமர் பிறந்த அயோத்தி உள்பட நாடு முழுவதும் ராமர் கோவில்கள் வர வேண்டும் என்ற மக்களின் கருத்ைத இந்தப் படம் பிரதிபலித்துள்ளது.
நான் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ராமாயனமுநம், மகாபாரதமும் நமது நாட்டின் பொக்கிஷங்கள். இவற்றை வைத்து திரைப்படங்கள் மட்டும் எடுக்காமல், நாட்டின் கலாச்சாரத்தை வெளிநாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையில் படங்களை உருவாக்க வேண்டும் என்று திரையுலகினரை கேட்டுக் கொண்டேன்.
18 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரத யாத்திரை மேற்கொண்டேன். அது சிந்திக்கும் தன்மையை வெகுவாக மாற்றியது. இந்திய அரசியலும் நிறையவே மாறிப் போக அது உதவியது என்றார் அத்வானி.
தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவ், அவரது மகனும் தெலுங்கு சூப்பர்ஸ்டார்களில் ஒருவருமான நாகார்ஜூனா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கிருஷ்ணமராஜு தயாரித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள்











Click it and Unblock the Notifications