3வது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் பிரகாசம்: சரத்குமார்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக, அதிமுக அல்லாத 3வது அணி விரைவில் தமிழகத்தில் உருவாகும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் பாமகவின் வாக்குகளை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது திமுக. இப்போது பாமகவை அது நீக்கியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை நீக்கியிருப்பது வருத்தத்திற்குரியது. மீண்டும் இத்தொகுதியை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
கக்கன் மணி மண்டபத்தில் அஞ்சலி:
முன்னதாக, மறைந்த அமைச்சர் கக்கனின் மணிமண்டபத்தில் சரத்குமார் அஞ்சலி செலுத்தினார்.
அரசியலில் நேர்மைக்கு மறு பெயர் என்று பெயர் பெற்றவர் முன்னாள் அமைச்சர் கக்கன். காமராஜரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்.
அவரது 99 வது பிறந்த நாள் தினம் சொந்த ஊரான மதுரை மேலூர் அருகில் உள்ள தும்பைபட்டியில் கொண்டாடப்பட்டது.
மணிமண்டபத்தில் கிராம மக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்.
அதே போன்று மதுரையில் நீதி மன்றம் அருகில் உள்ள கக்கன் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக சேவர்கள் என பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications