அணு ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் ராஜினாமா செய்வேன்: பிரதமர்

இரு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறைவேற்றி முடிக்குமாறு இந்தியாவை தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது அமெரிக்கா. ஆனால் கூட்டிக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டு வைத்துவிடும் எனக் கூறி கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
தங்கள் எதிர்ப்புகளையும் மீறி இந்த ஒப்பந்தத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றினால் கூட்டணியிலிருந்து விலகி அரசைக் கவிழ்த்துவிடுவோம் என கம்யூனிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, இடது சாரிகளை முடிந்தவரை சமாளிப்பது, இல்லையேல் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி ஆதரவை நாடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில், ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாவதை விட என் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். நிலைமையை நீங்களே சமாளித்துக் கொள்ளுங்கள் என வெளிப்படையாகவே இன்று அறிவித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங்.
கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
இந்த ஒப்பந்தம் மிக நம்பகத் தன்மையுள்ளது. நாணயமானது. இதை நிறைவேற்றுவதுதான் புத்திசாலித்தனம். எதிர்ப்பவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்த ஒப்பந்த்தத்துக்கு கணிசமான ஆதரவிருக்கிறது, என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, உடனடியாக களமிறங்கிய சோனியா காந்தி கூட்டணிக் கட்சிகளின் அவசர கூட்டத்தை நேற்று இரவு கூட்டினார். இக்கூட்டத்தின் முடிவில் எந்த எதிர்ப்பு வந்தாலும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. கம்யூனிஸ்டுகள் தவிர பிற கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இம்முடிவுக்கு ஆதரவளித்துள்ளன.
--
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications