சார்பதிவாளரை மிரட்டிப் பணம் பறித்தவர் கைது
தென்காசி: தென்காசி அருகே சார் பதிவாளரை மிரட்டி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசியை அடுத்த கேசவபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இடைகால் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராகப் பணியாற்றி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி ஒய்வு பெற்றார்.
கடையநல்லூர் மாவடிக்காலை சேர்ந்த சசிதரன் என்ற சக்கையன் மற்றும் இடைகாலை சேர்ந்த டிரைவிங் ஸ்கூல் உரிமையாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான செல்லத்துரை ஆகிய இருவரும் இடைகால் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த 5.3.2008 அன்று சென்றனர்.
பாலசுப்பிரமணியனை சந்தித்து தாங்கள் மனித உரிமை கழகத்திலிருந்து வருவதாகக் கூறினர். உங்கள் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. பல இடங்களில் நீங்கள் சொத்து வாங்கி இருக்கிறீர்கள். இதுகுறித்து எங்களது தலைமையில் விசாரணை நடத்த கூறியுள்ளனர்.
எங்களுக்கு 3 லட்ச ரூபாய் கொடுத்தால் இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடுகிறோம். தர மறுத்தால் உங்களை ஒய்வுபெற முடியாமல் செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன பாலசுப்பிரமணியன் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி 26-3-2008 அன்று 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
மீதிப் பணத்தை பின்னர் தருவதாக கூறினார். இந்நிலையில் கடந்த 31-3-2008 அன்று அவர் ஒய்வு பெற்றார். இதன்பிறகும் சசிதரன், துரை இருவரும் அவரிடம் சென்று மீதிப் பணத்தைத் தருமாறு கேட்டு மிரட்டினர்.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன் அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி சசிதரன், செல்லதுரையைக் கைது செய்தனர். சார்பதிவாளரை மனித உரிமை அமைப்பின் பெயரைச் சொல்லி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications