மெக்கெய்னை விட 15 பாயிண்ட் முன்னேறினார் ஓபாமா
நியூயார்க்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜான்மெக்கெய்னை விட 15 சதவீத புள்ளிகள் அதிகம் பெற்று ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பாரக் ஓபாமா வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளார்.
ஹில்லாரி கிளிண்டன் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிய பின்னர் நடத்தப்பட்ட முதலாவது கருத்துக்கணிப்பு இது. நியூஸ்வீக் இதழ் இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில், ஓபாமாவின் செல்வாக்கு உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே ஓபாமாவுக்கு அபாரான செல்வாக்கு உள்ளது.
ஓபாமாவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ள அதேசமயம், மெக்கெய்னின் செல்வாக்கு கணிசமாக குறைந்து விட்டது.
கடந்த மே மாதம், ஹில்லாரியும், ஓபாமாவும் கடும் போட்டியில் இருந்தபோது எடுக்கப்பட்ட நியூஸ்வீக் கருத்துக்கணிப்பில், இருந்ததை விட தற்போது ஓபாமாவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஓபாமாவால் நல்ல மாற்றத்தைக் கொடுக்க முடியும் என்று 51 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 18 வயது முதல் 39 வயதுக்குகள் இருப்போரின் ஆதரவு ஓபாமாவுக்கு 66 சதவீதமாக உள்ளது.
அதேசமயம், முதியோரின் வாக்குகளை இருவரும் ஏறக்குறைய சம அளவில் பகிர்ந்து கொள்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications