வாணியம்பாடி அருகே கோர விபத்து - 5 பேர் பலி
வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காட்பாடி அருகே உள்ள லத்தேரியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் தனது நண்பர்களுடன் நேற்றுமாலை 3மணியளவில் பெங்களூருக்கு காரில் போய்க் கொண்டிருந்தார்.
வாணியம்பாடி- பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தில் கார் போய்க் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி நடுச்சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை போலீஸார் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் போலீஸார் கவிழ்ந்து கிடந்த காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காரை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸாருக்கு பொதுமக்கள் சிலர் உதவினர். மேலும் விபத்து குறித்து அறிந்த ஜெயப்பிரகாஷின் உறவினர்களும் அங்கு வந்தனர்.
அந்த சமயத்தில், ராணிப்பேட்டையில் இருந்து வந்த ஒரு கார் படு வேகமாக கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துக்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications