கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள பூச்சி மருந்துடன் வந்த விவசாயியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
திண்டிவனம், வெள்ளி மேடுபேட்டை அருகில் உள்ளது நாகவரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (40). விவசாயி.
ழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுநீதி நாளான திங்கள் கிழமையன்று இவர் ஒரு மனுவுடன் வந்தார். மேலும் கையில் பூச்சி மருந்து பாட்டிலையும் வைத்திருந்தார்.
இதைப் பார்த்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவனிடம் ஒப்படைத்தனர்.
விவசாயி நாராயணசாமியிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன் விசாரணை நடத்திய போது, தன்னுடைய நிலத்தில் கிணறு வெட்டுவதற்காக வெள்ளிமேடு பேட்டையில் உள்ள வங்கியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கடன் கேட்டு இது நாள் வரை கடன் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில் நாராயணசாமி ரூ.1.75 லட்சம் செலவில் 40 அடி ஆழத்திற்கு கிணறு வெட்டியுள்ளார்.
அந்தப் பணியை முடிக்க வங்கிக்கும், கலெக்டர் அலுவலகத்திற்கும் சென்று பல முறை மனு கொடுத்தும் பயன் இல்லாததால் விரக்தி அடைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொள்வது என்ற முடிவு எடுத்தாக கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications