இந்தியாவில் புகைக்கு பலி 8 லட்சம் பேர்!
டெல்லி: சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் புகைப் பழக்கத்தால் ஏற்படும் பல்வேறு நோய்களில் உயிரை விடுவதாக அரசின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அட, விலையை எக்கச்சக்கமாக உயர்த்தினாலாவது 'புகைஞர்'களின் தீவிரம் குறையுமா என்று பார்த்தால், அது வேறு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
சிகரெட்தானே காஸ்ட்லி, நாங்க பீடிக்கு மாறிட்டோமே என்று கும்மியடிக்காத குறையாக பீடி, புகையிலை மற்றும் குட்கா வகைகளுக்குத் தாவி வருகிறார்களாம் 'புகைஞர்கள்'.
இந்தியாவில் மட்டும் 100 மில்லியன் மக்கள் புகைக்கும் பழக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களாம். இவர்களில் 53 சதவிகிதம் பேர் பீடிப் பிரியர்கள். 15 சதவிகிதம் மட்டுமே சிகரெட் பிடிப்பவர்கள். கைனி, குட்கா போன்றவற்றைப் பயன்படுத்துவோர் 32 சதவிகிதத்தினராம்.
சோஷியல் ஸ்மோக்கர்கள் எனப்படும் (எப்போதாவது புகைக்கும் பெண்களையும் சேர்த்து!) பிரிவினர் மட்டுமே 50 மில்லியன் இருப்பதாகக் கூறுகிறது இந்த ஆய்வு.
இந்த ஆய்வு முடிவுகளைப் பரிசீலித்த அரசு, இந்த ஆண்டு மேலும் 40 சதவிகிதம் வரை சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு விலையேற்ற முடிவு செய்துள்ளது.
பீடிப் பிரியர்கள் அதைவிட விலை குறைந்த புகைப் பொருளைக் கண்டுபிடிக்கும் வேலையில் இப்போதே இறங்கினாலும் ஆச்சர்யமில்லை.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications