ஸ்பீட் பெட்ரோல் விற்கமாட்டோம்: 'பங்க்'குகள் எச்சரிக்கை
டெல்லி: அடுத்த மாதம் முதல் ஸ்பீடு, ப்ரீமியம் மற்றும் பவர் போன்ற உயர்ரக பெட்ரோல் விற்பனையை நிறுத்தி விடுவோம் என மத்திய அரசுக்கு, பங்க் உரிமையாளர்கள் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தியது. அதன் பின்னர் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் பிரீமியம் பெட்ரோல், ஸ்பீடு பெட்ரோல் போன்ற விலை கூடுதலான பெட்ரோல் மட்டுமே அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. சாதாரண பெட்ரோலை விட இவை லிட்டருக்கு ரூ.6 அதிகம் என்பதால் இதை விற்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் பல பங்குகளில் சாதாரண பெட்ரோல் கேட்டு வாகன ஓட்டிகள் முறையிடுவதும் அவர்களிடம் பங்கு ஊழ்யர்கள் மல்லுக்கு நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் அதிக விலை உள்ள பெட்ரோலைத்தான் சப்ளை செய்வதாகவும், தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் பங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இன்னும் சில தினங்களுக்குள் சாதாரண பெட்ரோல் சப்ளை முழுவதுமாக நிறுத்தப்பட்டு விடும் என்றும் இப்போதே ஸ்பீடு பெட்ரோலுக்கு மாறிக் கொள்ளுங்கள் என்றும் பல பங்குகளில் அட்வைஸ் கொடுப்பதும் நடக்கிறது.
எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் இது பற்றி விசாரித்தபோது, யாருமே சரியான விளக்கம் தர முன் வரவில்லை.
இந் நிலையில் வாடிக்கையாளர்களின் நெருக்கடி தாங்க முடியவில்லை எனவும், கூடுதல் விலையுள்ள உயர் ரக பெட்ரோலுக்குப் பதில், வழக்கம் போல் சாதாரண பெட்ரோலை சப்ளை செய்யா விட்டால் அனைத்து வகை பெட்ரோல் விற்பனையையுமே நிறுத்தி விடுவோம் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோராவை சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர்.
பின்னர் கூட்டமைப்பின் தலைவர் அசோக் பத்வார் இது பற்றி நிருபர்களிடம் கூறியதாவது:
எண்ணை நிறுவனங்கள் 300 கிலோ லிட்டர் உயர் ரக பெட்ரோலும், அதே அளவுக்கு சாதாரண பெட்ரோலும் சப்ளை செய்கின்றன. அதாவது சாதாரண ரக பெட்ரோல் விற்கும் அளவுக்கு உயர்ரக பெட்ரோலை விற்க வேண்டும் (மொத்த விற்பனையில் 50 சதவீதம்) என்று எங்களைக் கட்டாயப்படுத்துகின்றன.
இந்த வகை பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை அதிக விலை உடையவை. அவற்றைத்தான் வாங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது.
ஆகவே பெட்ரோலியத்துறை மந்திரியை சந்தித்து, வழக்கம் போல் சாதாரண ரக பெட்ரோல் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டோம். அடுத்த வாரம் எண்ணை நிறுவன அதிகாரிகளை வரவழைத்து இது பற்றி பேசுவதாகவும், ஓரிரு வாரங்களில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்.
50 சதவீதம் சாதாரண ரக பெட்ரோலும், 50 சதவீதம் உயர் ரக பெட்ரோலும் விற்க வேண்டும் என்ற ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், அடுத்த மாதம் முதல் உயர் ரக பெட்ரோல் விற்பனையை நிறுத்தி விடுவோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications