அந்தமானில் கடும் நிலநடுக்கம் - சென்னையும் அதிர்ந்தது

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று மாலை 5.10 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இது 6.7 ஆக இருந்தது. இதனால் அந்தமான், நிக்கோபார் தீவுகள் பெருமளவில் அதிர்ந்தன.
அங்கு பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து விரிவான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. போர்ட் பிளேர், ஹட் பே, மிடில் அந்தமான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது.
பூகம்பத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த பூகம்பம் சென்னையிலும் எதிரொலித்தது. என்றாலும் நகரம் முழுவதும் இந்த நில நடுக்கம் உணரப்படவில்லை.
நகரின் மையப் பகுதிகளான ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர், கோயம்பேடு, வடபழனியின் சில இடங்களில் மட்டுமே இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்தப் பகுதியிலிருந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு உடனடியாக வெளியேறி சாலைகளில் நின்று கொண்டனர்.
சுமார் 3.5 ரிக்டர் அளவுக்கு இந்த நிலநடுக்கம் இருந்ததாக பின்னர் சென்னை வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
-
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு!












Click it and Unblock the Notifications