தடைபட்ட அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.
அமர்நாத் யாத்திரை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதன் பின்னர் 3 முறை யாத்திரை தடைபட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வன்முறை காரணமாக அமர்நாத் யாத்திரை பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று ஜம்முவிலிருந்து யாத்திரை தொடங்கியது. இருப்பினும் ராம்பான் பகுதியி்ல் 2 இடங்களில் கல்வீச்சும், நிலச்சரிவும் ஏற்பட்டதால் யாத்திரை பாதிக்கப்பட்டது.
இன்று 4105 பேர் அடங்கிய குழு யாத்திரையை தொடங்கியது. அவர்களில் 1034 பேர் பெண்கள், 193 பேர் சிறார்கள் ஆவர். காலை ஆறே கால் மணிக்கு யாத்திரை தொடங்கியது. 126 வாகனங்களில் இவர்கள் அமர்நாத் குகை நோக்கி சென்றனர்.
கேலாமோர் பகுதியில், பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு்ள்ளதால் யாத்ரீகர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராம்பான் வரை மட்டுமே செல்ல முடிகிறது. அப்பகுதியில் நிலச்சரிவை சரி செய்து வாகனப் போக்குவரத்தை ஏற்படுத்த எல்லை சாலைகள் கழகத்தினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
17ம் தேதி முதல் இதுவரை 27 ஆயிரத்து 62 யாத்ரீகர்கள் யாத்திரை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications