பணியின்போது அலட்சியம்: 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்
சிவகங்கை: கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு செல்லாமல் உறவினரோடு ஜாலியாக இருந்த ஏட்டுகளை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சாக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த கோவில் திருவிழாவிற்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அதில் திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் தங்கராஜ், செந்தில் குமார் ஆகியோர் பணிக்கு செல்லாமல் திருவிழாவிற்கு வந்த உறவினர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டே சென்று விட்டனராம்.
தகவல் அறிந்த எஸ்.பி. கண்ணன் விசாரணை நடத்தினார். இதில் திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் தங்கராஜ், செந்தில் குமார் ஆகியோர் பணி்க்கு செல்லாமல் இருந்து தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களை எஸ்பி கண்ணன் சல்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications