மரத்தில் கார் மோதி பாளை. வியாபாரிகள் 6 பேர் பலி
நெல்லை: முக்கூடல் அருகே நேற்று இரவு மரத்தில் கார் மோதியதில் அதில் பயணம் செய்த 6 வியாபாரிகள் பலியாகினர். அனைவரும் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர்கள்.
பாளை. சமாதானபுரம், மனகாவலம் பிள்ளைநகர் பகுதியைச் சேர்ந்த இரும்பு வியாபாரிகள் 9 பேர் முக்கூடல் அருகேயுள்ள வடக்கு பாப்பான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பேரல்கள் ஏலம் எடுக்க ஒரு காரில் சென்றனர்.
அங்கு ஏலம் எடுத்து விட்டு சுமார் 30 பேரல்களை ஒரு வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் தாங்கள் சென்ற காரிலேயே நெல்லைக்குத் திரும்பினர். இரவு சுமார் 7 மணியளவில் முக்கூடல் மைலப்பபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த கார் சாலையோர மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் முனியப்பன், சொர்ணமுத்து, கிருஷ்ணன், சமாதானபுரத்தை சேர்ந்த பீர் முகமது மகன் பாசில், தூத்துக்குடி வெற்றிவேல் புரத்தை சேர்ந்த இஸ்மாயில் மகன் சம்சுதீன் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலயே பலியாகினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கடையம் இன்ஸ்பெக்டர் வேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார் டிரைவர் தமீம் அன்சாரி, ஆறுமுகம், பெரோஸ்கான், நாகூர் மைதீன், அப்துல் முத்தலீப் ஆகிய 6 பேரை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications