கரூர் அதிமுக முன்னாள் நகர செயலாளரின் மண்டை உடைப்பு
கரூர்: பாதுகாப்பு கேட்டு வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்த கரூர் அதிமுக முன்னாள் நகர செயலாளருக்கு அடி உதை விழுந்தது. மண்டை உடைக்கப்பட்டது.
கரூர் வடக்கு காந்தி கிராமத்தில் வசிப்பவர் சாரங்கபாணி (50). இவர் அதிமுக முன்னாள் நகர செயலாளராக இருந்தவர். கட்சியில் பல பொறுப்புகளில் பணியாற்றியவர்.
இவரது வீட்டு அருகில் வசிக்கும் ராஜூ என்பவருக்கும், கட்டிட ஒப்பந்ததாரர் நல்லுசாமி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இதில் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது நல்லுசாமி, ராஜூவை தாக்கும் போது அவர் பாதுகாப்பு கோரி அருகில் இருந்த சாரங்கபாணி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அவருக்கு அடைக்கலம் கொடுத்த சாரங்கபாணியை ஒப்பந்ததாரர் நல்லுசாமி, மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் சிலர் கண்களில் மிளகாய் பொடி தூவி, உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. மேலும் கை, தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த சாரங்கபாணி சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து நல்லுசாமி உள்பட 4 பேரை கைது செய்தனர்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications