ராணுவ மரியாதையுடன் மானக் ஷா உடல் அடக்கம்

நீலகிரி மாட்டம் குன்னூர் - கோத்தகிரி சாலையில், வண்டிச்சோலை பகுதியில் உள்ள பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வந்த மானக் ஷா நேற்று முன்தினம் நள்ளிரவு மரணமடைந்தார்.
இதையடுத்து நேற்று காலை7 மணிக்கு அவரது உடல் ராணுவ டிரக்கில் அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் 11 மணியளவில் உடல் வெலிங்டனில் உள்ள எம்.ஆர்.சி. ஸ்கொயருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முப்படை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அரசின் சார்பில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பெல்லம் ராஜு, தமிழக முதல்வர் சார்பில் கதர் வாரியத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல், வங்கதேச நாட்டு ராணுவ அதிகாரிகள்உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ராணுவ வீரர்கள் 17 பீரங்கிக் குண்டுகளை முழங்கினர். ராணுவ அதிகாரிகள் சல்யூட் அடித்து மானக் ஷாவுக்கு மரியாதை செலுத்தினர்.
பிறகு அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில், மானக் ஷாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று மானக் ஷாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இறுதி ஊர்வலம் ஊட்டி, எஸ்.பி.அலுவலகம் அருகே உள்ள பார்சி இனத்தவரின் கல்லறைக்கு வந்து சேர்ந்தது. அங்கு மாலை 5.05 மணிக்கு பார்சி முறைப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. 6.10 மணிக்கு மானக் ஷாவின் உடல் நல்லடக்கம் நடைபெற்றது.
மனைவி சிலோ போடோவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மானக் ஷாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications