ஹெல்மட் அணிவது ஜூலை 1 முதல் புதுச்சேரியிலும் கட்டாயம்
புதுச்சேரி: இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என புதுச்சேரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் குப்புசாமி கூறுகையில், புதுச்சேரி மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் கீழ் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவினை மாநில காவல்துறை இயக்குநர் கான் பிறப்பித்துள்ளார்.
பெண்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
ஜூன் 30ம் தேதி முதல் புதுச்சேரியில் ஸ்பாட் பைன் முறை அமலுக்கு வருகிறது. முதலில் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு இது அமல்படுத்தப்படும். பின்னர் இருசக்கர வாகனங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.
புதுச்சேரி போலீஸில் கடந்த 2 ஆண்டுகளாக 34 ஆயிரம் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார் குப்புசாமி.












Click it and Unblock the Notifications