ஜி-8 மாநாட்டுக்கு மன்மோகன் போனால் ஆதரவு வாபஸ்: இடதுசாரிகள்
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் நிச்சயம் நிறைவேறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள இடதுசாரிகள், இது தொடர்பான ஜி.8 மாநாட்டுக்கு பிரதமர் போனால் தரவு வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ளன.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை மெளனம் சாதித்து வந்த பிரதமர் இன்று வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரப்பில் கூறுகையில், ஜி 8 மாநாட்டுக்கு பிரதமர் போகக்கூடாது என்பது எங்களது முக்கிய கோரிக்கை. ஒருவேளை அதற்கு மாறாக பிரதமர் முடிவெடுத்தால், அதை அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சாதகமான நடவடிக்கையாகவே நாங்கள் கருத நேரிடும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து நாங்கள் பரிசீலிக்க நேரிடும். இப்போதே, எப்போது ஆதரவை திரும்பப் பெறுவது என்ற பரிசீலனையில் நாங்கள்
உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் உறுதியான பேச்சு மற்றும் இடதுசாரிகளின் கருத்ைதப் பார்க்கும் போது, மத்திய அரசுக்கு இடதுசாரிகள் அளித்து வரும் ஆதரவு விரைவிலேயே விலக்கிக் கொள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications