இது லோக்கல் (பெட்ரோல்) பாலிட்டிக்ஸ்!

பெட்ரோல் பாலிட்டிக்ஸ் மூலம் சர்வதேச அளவில் அமெரிக்க-இங்கிலாந்து பங்குச் சந்தைகள் நடத்தும் லீலைகள் ஒரு பக்கம் கிடக்கட்டும். இங்கே உள்ளூரில் நமது 'மக்கள் நல' அரசுகளும், மக்கள் 'காவலர்களும்' நடத்துகிற லோக்கல் பெட்ரோல் பாலிடிக்ஸ் இருக்கிறதே...!
கிடங்கில் வேண்டிய எண்ணெய் இருக்கிறது. எடுத்துச் சென்று பங்குகளுக்கு சப்ளை செய்ய சென்னை நகரில் மட்டுமே 20,000 லாரிகள் உள்ளன. ஆனால் எந்த பங்கிலும் பெட்ரோல் இல்லை என்ற ஒரே பல்லவிதான் நேற்று காலை முதல்.
அது என்னமோ சொல்லி வைத்த மாதிரி ஏரியாவுக்கு ஒரு பங்க் வீதம் மட்டுமே செயல்பட்டன. மற்றவை மூடிக் கிடந்தன, போலீசார் பாதுகாப்புடன்.
பெரும்பாலான பங்குகளில் அப்பாவி ஜனங்கள் மைல் நீள க்யூவில் மணிக்கணக்கில் காத்திருந்து, 'பெட்ரோல் கன்'னுக்கு அருகில் வரும்போது பெட்ரோல் தீர்ந்துடுச்சி என்ற பல்லவியைக் கேட்டு நொந்து மனம் வெதும்பித் திரும்பிய அவலம்.
இன்னும் சில இடங்களில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோன வாகனங்களைத் தள்ளக் கூட திராணியின்றி தடுமாறிக் கொண்டிருந்த ஜனப்கள்.
இன்று இரவு முதல் லாரிகளும் ஓடாது என்பதால் நாளையும் பெட்ரோல் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
என்னதான் நடக்கிறது?
நாமே நேரடியாகக் களமிறங்கினோம்.
கொருக்குப் பேட்டையிலும், தண்டையார்பேட்டையிலும் உள்ள பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களின் பிரமாண்ட கிடங்குகளைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஓரம் கட்டப்பட்டிருந்தன.
ஏன், எண்ணெய்க் கிடங்குகள் வற்றிப் போய்விட்டனவா...
இல்ல சார்... வெயிட் பண்ணுங்க, கூப்பிடுகிறோம்னு சொல்லிட்டாங்க டாங்க் ஃபில் பண்றவங்க. அநேகமா நாளை மதியம் வரை நிலைமை இப்படியேதான் இருக்கும்னு நினைக்கிறோம்...
-இந்தியாவின் எண்ணெய் கம்பெனிகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக வாகன ஓட்டியாக இருக்கும் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் இது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து விசாரித்தோம். பெயரை நிச்சயம் வெளியிடக் கூடாது என சத்தியம் வாங்காத குறையாக நம்மை வற்புறுத்திய அவர் கூறியதிலிருந்து...
எண்ணெய் நிறுவனங்கள் எந்த அளவு வர்த்தகம் செய்தால் நஷ்டத்திலிருந்து தப்பிக்குமோ, அந்த அளவு பெட்ரோலியப் பொருட்களை விற்றால் போதும் என்று லேட்டஸ்டாக முடிவெடுத்ததன் விளைவுதான் இந்த திடீர் பெட்ரோல் பற்றாக்குறை.
இது சென்னையில்தான் என்றில்லை, நாடு முழுவதுமே எதிரொலிக்கத்தான் போகிறது. எங்களுக்கும் வேறு வழியில்லை. தொடர்ந்து ரூ.41 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குகின்றன இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள். இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் என்றார்.
இந்த ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.7,500 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளீர்களே...
அதுபற்றி என்னிடம் கேட்காதீர்கள். சேர்மனிடம் கேளுங்கள் என்றார்.
சேர்மனைக் கேட்டோம்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் அதன் முக்கிய சுத்திகரிப்புப் பிரிவான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் சேர்மன் சர்தக் பெஹூரியாவிடம் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு பேசினோம்.
பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஆண்டுதோறும் பேலன்ஸ் ஷீட்டில் லாபம்தான் காட்டுகிறீர்கள். உதாரணம்: இந்த ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லாபம் ரூ.7,500 கோடி என நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த முரண்பாடு எப்படி?
2002ம் ஆண்டு வரை இந்தப் பிரச்சினைகள் இல்லாமல் எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தன. ஆண்டுக்கு 16 சதவிகிதம் நிரந்தர லாபம் கிடைத்து வந்தது. அதன்பிறகுதான் நிலைமை மோசமாகிவிட்டது.
இந்த ஆண்டு ரூ.7,500 கோடி லாபம் கிடைத்திருப்பது உண்மைதான். ஆனால் நாங்கள் இதே ஆண்டில் செய்ய வேண்டிய முதலீடு கிட்டத்தட்ட ரூ.15,000 கோடி. அப்படியே இருமடங்கு. அதற்கு நான் எங்கே போவேன். புதிய கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்கள், பைப் லைன்கள் போட மூலதனத்துக்கு எங்கே போவது. வேறு வழியில்லை, விலையை உயர்த்தியே ஆக வேண்டும்.
இன்னுமா உயர்த்தப் போகிறீர்கள்?
இன்னும் ஒரு லிட்டருக்கு ரூ.17 வரை விலை உயர்த்தினால்தான் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும்!!
இப்படி விலை உயர்த்தத்தான் இந்த தற்காலிக தட்டுப்பாடு நாடகம் என்கிறார்களே...
அதுபற்றி நான் கவலைப்பட முடியாது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு எங்களை நஷ்டத்தில் பெட்ரோல் விற்கச் சொல்கிறீர்கள்... எந்த அளவு நஷ்டத்தைத் தாங்க முடியுமோ அந்தளவுக்கு விற்பனையை வறையறுத்திருக்கிறோம்.
பெட்ரோல் இருப்பு குறைந்துவிட்டதா... எண்ணெய்க் கப்பல் வராததால் சப்ளை இல்லை என்கிறார்களே...
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. நம்மிடம் தேவையான அளவு ஸ்டாக் இருக்கிறது.
ஏன் ப்ரீமியம் பெட்ரோல் விற்பதில் இவ்வளவு ஆர்வம்... இதுவும் ஒருவிதத்தில் அறிவிக்கப்படாத விலை உயர்வுதானே...
சுற்றுச் சூழல் நன்மை கருதி அரசே எடுத்த முடிவுதான் ஆக்டேன் பெட்ரோல்-டீஸலை அதிகம் விற்க வேண்டும் என்பது. எப்படியிருந்தாலும் இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு முழுவதும் இந்த உயர்தரப் பெட்ரோலுக்கு மாறித்தானே தீர வேண்டும்.
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால், அதை மக்களும் மறுபேச்சின்றி ஏற்றுக் கொண்டால் சப்ளை சீராகிவிடுமா?
பாருங்கள்... பெட்ரோல் டீஸல் விலை உயர்வு என்பது என் தனிப்பட்ட விருப்பமில்லை. முன்பு மாதிரி கூட்டு பெட்ரோலிய கணக்குகள் வைத்து லாப நஷ்டத்தைப் பகிர்ந்து, இறுதியாக குறிப்பிட்ட தொகையை லாபமாகப் பகிர்ந்தளிக்கும் முறையுமல்ல. சந்தை சக்திகள்தான் இப்போது எல்லவாற்றையும் தீர்மானிக்கின்றன. அதன் போக்குக்கு ஏற்ப நாம் வளைந்துதான் தீரவேண்டும்.
எப்படியிருப்பினும் இன்னும் இரு தினங்களில் நிலைமை சீராகிவிடும், என்கிறார் பெஹூரியா.
நாடு முழுவதுமே....
ஆக, விலையேற்றத்தை மக்கள் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்பதை எண்ணெய் நிறுவனங்களே கிட்டத்தட்ட ஒப்புக் கொள்கின்றன.
இந்தத் தட்டுப்பாடு இப்போது சென்னையில் அதிகம் தெரிவது போல் தோன்றினாலும், நாடு முழுவதுமே பெட்ரோல் டீஸல் விற்பனையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் இரண்டு தினங்களில் நிச்சயம் பெட்ரோல்-டீஸல்-எரிவாயு சப்ளை நிச்சயம் சீராகிவிடும். காரணம் நம்மிடம் தேவையான அளவு ஸ்டாக் இருக்கவே செய்கிறது.
சப்ளை சரியான சில தினங்களில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்ற அறிவிப்பு வந்தாலும் வரலாம்.
அப்போது நாம் யாரும் விலை உயர்வைப் பற்றிப் பேசமாட்டோம்.. என்ன விலையோ.. பெட்ரோல் தாராளமா கிடைக்குதா.. அது போதும்! என்று சொல்லும் மனநிலைக்கு வந்துவிட்டிருப்போம்.
கிட்டத்தட்ட 'psychological warfare' மாதிரி தான்.
வாழ்க 'மக்கள் நல' அரசுகள்!!
-
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை












Click it and Unblock the Notifications