கணவரின் புற்றுநோய்-அவரை கொல்ல முயன்று மனைவி தற்கொலை
கோவை: புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கணவர் படும் துயரத்தை காண சகிக்காமல் அவரை சுத்தியலால் அடித்து கருணைக் கொலை செய்ய முயன்று தற்கொலை செய்து கொண்டார் மனைவி. ஆனால் அவரது கணவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பசுபதி (வயது 72). இவரது மனைவி அனுசுயா (68).
இவர்களுக்கு மனோன்மணி, ரேணுகா தேவி என இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனோன்மணி கோவையை அடுத்த காரமடையிலும், ரேணுகாதேவி திருச்செங்கோட்டிலும் வசித்து வருகிறார்கள்.
பசுபதி கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் கடை நடத்தி வந்தார். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து இரு மகள்களையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தார். உடல் நலம் சரியில்லாமல் கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு பசுபதிக்கு தலைவலி ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு தலையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆபரேஷன் செய்யப்பட்டது. மருந்துகள் சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை பசுபதியின் மகள் ரேணுகா தேவி வீட்டுக்குப் போன் செய்தார்.ஆனால் மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த அவர் பக்கத்து வீட்டுக்குப் போன் செய்து என்ன என்று பார்க்குமாறு கூறினார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் பசுபதி வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்கள். யாரும் திறக்கவில்லை. கதவை திறந்து பார்த்தனர். அப்போது பசுபதியின் மனைவி அனுசுயா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார்.
அவரது அருகில் தரையில் பசுபதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பசுபதி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு ஏற்கனவே தலையில் ஆபரேசன் செய்யப்பட்டு இருந்ததாலும் அதே இடத்தில் தாக்கப்பட்டு இருந்ததாலும் அவரது நிலைமை மோசமாக இருக்கிறது.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியதில் பசுபதியை அவரது மனைவி அனுசுயா தலையில் தாக்கிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பசுபதி, தினமும் தலைவலியால் அவதிப்படுவதும், அடிக்கடி மயங்கி விழுவதும் அனுசுயாவுக்கு வேதனையை கொடுத்தது. மேலும் அனுசுயாவுக்கு சரியாக காது கேட்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே பெரும் அவதிப்பட்டனர். இயலாமை ஒருபுறமும், நோய்க்கொடுமை மறுபுறமும் சேர்ந்து துரத்த முதிய தம்பதிக்கு வாழ்க்கை பெரிய சுமையாக மாறியது.
அதனால் கணவர் படும் வேதனை தாங்க முடியாமலும், மேற்கொண்டு வாழ விருப்பமில்லாததாலும் தற்கொலை செய்துகொள்ள அனுசுயா முடிவு செய்தார். தான் இல்லாவிட்டால் கணவரின் கதி என்ன ஆகும் என்று சிந்தித்த அவர், கணவரை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு அனுசுயா போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதத்தை எழுதி தபால் உறையில் போட்டு அருகில் வைத்துக்கொண்டார். அதன்பிறகு முதலில் கணவரை கொல்ல திட்டமிட்டு வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்தார். அப்போது பசுபதி தூங்கிக்கொண்டு இருந்தார்.
ஆபேரஷன் செய்த இடத்தில் அடித்தால் அவர் உயிரிழந்து விடுவார் என நினைத்து அந்த இடத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் துடித்த பசுபதி ரத்த வெள்ளத்தில் மிதந்தார். பின்னர் மயக்கமடைந்தார்.
பின்னர் பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீரில் கரைத்து குடித்தார்.
ஆனால் அனுசுயாவுக்கு ஒன்றும் செய்யவில்லை. உடனே கயிற்றால் வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கொடுமையான சம்பவம் சிங்காநல்லூர் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பசுபதியைத் தாக்குவதற்கு முன்பு அனுசுயா எழுதியிருந்த தற்கொலைக் கடிதம் மிகவும் உருக்கமாக உள்ளது.
அதில் அனுசுயா கூறியிருப்பாதவது ..
ஐயா, என் கணவருக்கு புற்றுநோய் உள்ளது. தலையில் கட்டி ஏற்பட்டு அதற்காக 6 மாதத்துக்கு முன்பு ஆபரேசன் செய்யப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் அவருக்கு மரணம் ஏற்படலாம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். மருந்து மாத்திரை சாப்பிட்டு வாருங்கள் என கூறினர். அவருக்கு வலிப்பும் ஏற்படுவதுண்டு. எனக்கு சரியாக காது கேட்காது.
என் கணவர் புற்றுநோயால் அவதிப்படுவதை பார்த்து நான் தினந்தோறும் வேதனைப்பட்டேன். தூக்கம் வரவில்லை. அதனால் நான் உயிர் வாழ விரும்பவில்லை. புற்றுநோய் வந்தால் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தொந்தரவு கொடுக்கும். அதன்பிறகு வேதனைப்பட்டு சாகவேண்டும். இதை பார்க்க வேதனையாக இருக்கும். என் கணவர் படுக்கையில் விழுந்தால் நான் என்ன செய்ய முடியும்.
அதனால் சாவுக்கு தயாராகிவிட்டேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். அவரை தனியாக விட்டு செல்ல என்னால் முடியவில்லை. என் கணவர் மிகவும் தைரியசாலி. கோழையாக இருக்கக் கூடாது என்று அவர் என்னிடம் சொல்வார். அவரை விட்டு நான் தனியாக சாக முடியாது. அதனால் அவரை என்னுடன் அழைத்து செல்கிறேன்.
நான் கரப்பான் பூச்சி மருந்து சாப்பிட்டு என் மரணத்தை நானே தேடிக் கொள்கிறேன். என் கணவரை சுத்தியலால் தலையில் அடித்து கொன்றுவிட்டு நானும் மருந்து சாப்பிட்டுக்கொண்டேன். என் சொந்த நினைவில் இதை எழுதுகிறேன். என் நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. இது என் விருப்பப்படி எடுத்துக்கொண்ட முடிவு என்று கூறியுள்ளார் அனுசுயா.
ஆனால், அனுசுயா இறந்துவிட அவரது கணவர் பசுபதி கோமா நிலையில் மருத்துவமனையில் உள்ளார். தன்னை மனைவி கொல்ல முயன்று தற்கொலை செய்து கொண்டது கூட தெரியாமல்...
-
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி வழக்கு.. குற்றவாளிகள் மீது பாய்ந்த ஆக்ஷன்! பரபரப்பான கோவை! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications