கொலை முயற்சி: இந்திய மாணவருக்கு சிங்கப்பூரில் சிறை
சிங்கப்பூர்: கொலை முயற்சி வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த மாணவருக்கு சிங்கப்பூர் கோர்ட், 16 ஆண்டு சிறைத் தண்டனையும், 16 கசையடி தண்டனையும் விதித்துள்ளது.
சிங்கப்பூர் பாலிடெக்னிக் கழகத்தில், படித்து வருபவர் பட்லா ஜதீன் நவீன் (23).அங்கு மெரைன் என்ஜீனியரிங் படிப்பை படித்து வருகிறார் நவீன்.
இவரும், மும்தா சஹானி (38) என்கிற வெப்டிசைனருக்கும் இடையே காதல் மலர்ந்தது. மும்தா திருமணமாகி விவாகரத்து ஆனவர். அவருக்கு 8 வயது மகனும் உள்ளார். இந்தக் காதலுக்கு மும்தாவின் 72 வயது தந்தை சஹானி மானிக் ராம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மும்தாவைப் பார்க்க வரக் கூடாது என நவீனையும் எச்சரித்தார். இதனால் மும்தா, நவீனைப் பார்ப்பதைத் தவிர்த்தார்.
இதனால் கோபமடைந்த நவீன் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் சஹானியின் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த சஹானி, அவரது இரு வேலையாட்களை கத்தியால் குத்தினார். இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.
ஆபத்தான நிலையில் மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சஹானி அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதையடுத்து நவீன் மீது போலீஸார்வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சி, தவறான செய்கை, படுகாயத்தை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானதாக சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து நீதிபதி கான் திங் சியூ அளித்த தீர்ப்பில், சஹானியை கொலை செய்ய முயன்றதற்கு 10 ஆண்டு சிறை மற்றும் 6 கசையடிகளும், இரு வேலையாட்களை தாக்கியதற்கு 6 ஆண்டு சிறை மற்றும் 10 கசையடிளும் தண்டனையாக வழங்கப்படுவதாக அறிவித்தார்.
தனது தாயார் வீட்டை விற்று தன்னை படிக்க அனுப்பியிருப்பதாகவும், தன்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் நவீன் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications