சமாஜ்வாடிக்கு 50 எம்.பி. சீட்: காங்.குடன் ஒப்பந்தம்?
லக்னோ: அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸும், சமாஜ்வாடி கட்சியும் நெருங்கி வந்துள்ள நிலையில், இன்னொரு புறம், உ.பி. லோக்சபா சீட்களை பிரித்துக் கொள்ளும் ஒப்பந்தம் ரகசியமாக நடந்தேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சமாஜ்வாடியும் இணைகிறது. இதற்கு முன்னோட்டமாக இன்றுகாலை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், முலாயம் சிங் யாதவும், அமர்சிங்கும் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில், லோக்சபா தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இரு கட்சிகளும் தேர்தல் உடன்பாட்டை முடித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வாரத் தொடக்கத்தில் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் காங்கிரஸ் -சமாஜ்வாடி கூட்டணி குறித்து இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், உ.பியில் உள்ள 80 லோக்சபா சீட்களில் 50 சீட்களை முலாயம் கட்சிக்கு தர காங்கிரஸ் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளருமான திக் விஜய் சிங், உ.பி. காங்கிரஸ் தலைவர் டாக்டர் ரீதா பகுகுணா ஜோஷி, காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் பிரமத் திவாரி, முன்னாள் உ.பி. காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி ரேபரேலி, அமேதி உள்பட 25 தொகுதிகளில் போட்டியிடும். ரேபரேலியில் சோனியாவும், அமேதியில் ராகுல்காந்தியும் எம்.பியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாஜ்பாய் வசம் தற்போது உள்ள லக்னோ தொகுதியையும் காங்கிரஸ் சமாஜ்வாடியிடம் கேட்டுள்ளது.
சமாஜ்வாடியுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்துள்ள காங்கிரஸ் அடுத்து அஜீத்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாம். அக்கட்சிக்கு 3 சீட்களைக் கொடுக்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாக தெரிகிறது.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளமும் 1 அல்லது 2 சீட் தருமாறுகோரியுள்ளதாம். இதுகுறித்தும் பரிசீலனை செய்துவருகிறதாம் காங்கிரஸ்.
கடந்த 2007ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸும், சமாஜ்வாடிக் கட்சியும் பெற்ற மொத்த வாக்குகள் 44 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமாஜ்வாடிக் கட்சி 32 சதவீத வாக்குகளைப் பெற்ற 98 சீட்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 12 சதவீத வாக்குகளைப் பெற்று 22 சீட்களில் வென்றது.
தற்போது சமாஜ்வாடிக்கு உ.பியில் 39 எம்.பிக்கள் உள்ளனர். காங்கிரஸுக்கோ 9 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications