50 ரூபாய் தர மறுத்த சிறுவனை ரயிலிலிருந்து தள்ளிய டிடிஆர்
டெல்லி: ரயில் பெட்டியில் கிடந்த 50 ரூபாய் தாள் யாருக்கு சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில், 13 வயதுசிறுவனை, ஓடும் ரயிலிலிருந்து பிடித்துக் கீழே தள்ளினார் கொடுமைக்கார டிக்கெட் பரிசோதகர். இதில் அந்த சிறுவனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டு விட்டது.
கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. ரூர்கேலா வந்த அந்த ரயிலில் சங்கர் சிங் என்கிற 13 வயது சிறுவன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான். அப்போது ரயில் பெட்டியில் 50 ரூபாய் தாள் கிடப்பதைப் பார்த்தான்.
அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அந்த பணத்தை தன்னிடம் தருமாறு கூறியுள்ளார். ஆனால் அதைத் தர மறுத்துள்ளான் சங்கர்சிங். இதனால் கோபமடைந்த டிக்கெட் பரிசோதகர் ஈவு இரக்கமே இல்லாமல், ஓடும் ரயிலிலிருந்து சிறுவனைப் பிடித்து தள்ளி விட்டார்.
இதில் சிறுவன் படுகாயமடைந்தான். உடனடியாக ரூர்கேலாவில் உள்ள மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்றனர். அங்கு அவனது ஒரு காலை வெட்டி எடுத்துள்ளனர் டாக்டர்கள். தொடர்ந்து அவன் சிகிச்சை
பெற்று வருகிறான்.
இந்த சம்பவம் குறித்து சங்கர் சிங்குடன் இருந்த அவனது நண்பர் ராஜேஷ் சிங் கூறுகையில், அந்த டிக்கெட் பரிசோதகர் பெரிய மீசையுடன் இருந்தார். சங்கரை அவர் சரமாரியாகஅடித்து கீழே தள்ளி விட்டார். அவரை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்றான்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட பரிசோதகர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை உடனடியாக கைது செய்யாவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக உள்ளூர் மக்கள் எச்சரித்துள்ளனர்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications