ஆக. 8 முதல் என்ஜினீயரிங் வகுப்புகள் தொடக்கம்
சென்னை: முதலாண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 8ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்கள் சேருவதற்கான சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று தொடங்கியது. மொத்தமுள்ள 100 இடங்களுக்கு 400 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் அட்மிஷன் உத்தரவை வழங்கி கவுன்சிலிங்கை தொடங்கி வைத்தார். பின்னர் துணைவேந்தர் மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:
விடுதி வசதி விரிவாக்கம்:
என்ஜினீயரிங் படிப்பில் விளையாட்டு பிரிவினருக்கு மொத்தம் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கு 2,517 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதி அடிப்படையில் 400 பேருக்கு கவுன்சிலிங்கிற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. கவுன்சிலிங் மூலம் 100 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் விடுதி வசதி போதுமானதாக இல்லை. மாணவ-மாணவிகளின் வசதிக்காக விடுதி வசதியை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி, கிண்டி வளாகத்தில் கூடுதலாக 200 பேரும், எம்.ஐ.டி. வளாகத்தில் கூடுதலாக 100 பேரும் விடுதியில் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
முதல் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக விடுதி வசதிக்கான பணிகள் முடிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications