மருத்துவ கவுன்சிலிங்: கோர்ட்டில் வாதாடி வென்ற மாணவி
மதுரை: வயதை காரணம் காட்டி மறுக்கப்பட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்கும் உரிமையை நீதிமன்ற உதவியுடன் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி வாதாடி, போராடி பெற்றுள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மருங்கராஜ். இவரது மகள் திவ்யபாரதி (17). இவர் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் டூ தேர்வில் 1055 மதிப்பெண் பெற்றிருந்தார். கட்ஆப் மதிப்பெண் 195.5 பெற்றிருந்தார். இதனால் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் மாணவி திவ்யபாரதிக்கு வயது 16 என்று காரணம் காட்டி மருத்துவ கவுன்சிலிங்கில் சேர அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் தனக்கு நீதி வேண்டி திவ்யபாரதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
நேற்று இந்த மனு விசாரனைக்கு வந்தது. ஆனால் வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் பங்கு எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்ட மாணவி திவ்யபாரதி நீதிமன்றத்தில் தானே ஆஜராகி நீதிபதி சுகுணா முன்பு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.
அப்போது, தனது பிறந்த தேதி 5.3.91 என்றும், ஆனால் பள்ளிச் சான்றிதழில் அது தவறுதலாக மாற்றப்பட்டு விட்டது என்றும், மேலும் அந்த தவற்றை சுட்டிக்காட்டி பள்ளி நிர்வாகத்திடம் மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை என்றும் வாதாடினார். தனது அசல் பிறப்பு சான்றிதழையும் சமர்ப்பித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவி திவ்யபாரதியை மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு உத்தரவிட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications