காங்.கை 'பிளாக்மெயில்' செய்யவி்ல்லை-அமர்சி்ங்
டெல்லி: நாட்டில் விலைவாசி உயர்வையும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளிதியோராவும் தவறி விட்டனர் என்று சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது சமாஜ்வாடிக் கட்சி. இதற்காக சில நிபந்தனைகளை அது காங்கிரஸ் முன் வைத்துள்ளது. அதில் முக்கியமானது ப.சிதம்பரத்தையும், முரளி தியோராவையும் முதலில் அந்தப் பொறுப்புகளிலிருந்து தூக்க வேண்டும் என்பதுதான்.
ப.சிதம்பரத்தையும், முரளி தியோராவையும் குறி வைத்திருப்பது ஏன் என்பது குறித்து அமர்சிங் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறுகையில், எங்களுக்கு அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்த பகையும் இல்லை. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டுதான் அவர்களை எதிர்க்கிறோம்.
விலைவாசி உயர்வு தலைவிரித்தாடுகிறது. இதைக் கட்டுப்படுத்த நிதியமைச்சகம் தவறி விட்டது. இதனால் பணவீக்கம் பல மடங்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இரும்பு, சிமென்ட் பற்றாக்குறை விஸ்வரூபமெடுத்துள்ளது. அவற்றின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும். அனைத்தையும் சமமாக கருத வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வும் வரலாறு காணாத அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடும் பெரும் பிரச்சினையாகி வருகிறது. இதை பெட்ரோலியத் துறை சரி செய்திருக்க வேண்டும்.
இந்தக் காரணங்களால்தான் நாங்கள் இரு அமைச்சர்களையும் விமர்சிக்கிறோமே தவிர வேறு எந்த தனிப்பட்ட காரணமும் எங்களிடம் இல்லை. அவர்களது கொள்கைகளைத்தான் எதிர்க்கிறோமே தவிர அவர்களை எதிர்க்கவில்லை.
பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, பெட்ரோலியத் துறை அமைச்சராகத்தான் செயல்பட வேண்டும். ஆனால் அவரோ தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான அமைச்சர் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும் பிரதமரிடமும், சோனியாவிடமும் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து அனாவசியமான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. நாங்கள் காங்கிரஸை பிளாக் மெயில் செய்யவில்லை. எங்களுக்கு நாட்டின் நலனே முக்கியம்.
அதே போல எங்களுக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றும் கேட்கவில்லை. இதில் எந்த டீலும் இல்லை. நிபந்தனைகள் கூட போடவில்லை. அமைச்சரவையில் பங்கும் கேட்கவில்லை.
நாங்கள் இந்த அரசில் சேரப் போவதே இல்லை. அவர்களது பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து எதிர்க்கத் தான் போகிறாம் என்றார் அமர்சிங்.
முறைப்படி பேசவில்லை-குழப்பும் அமர்சிங்:
இந் நிலையில், இன்று நிருபர்களிடம் பேசிய அவர், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் முறைப்படி எதுவும் பேசவில்லை. ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் வட்டாரம் பெரும் குழப்பமடைந்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் அமர்சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினோம். இருப்பினும் இது முறைப்படியான பேச்சு இல்லை. எங்களுக்கு இடையே எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
லோக்சபாவில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், நாங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்.
3வது அணியிலிருந்து சமாஜ்வாடி கட்சி தானாகவே வெளியேறி விட்டது என்று ஓம் பிரகாஷ் செளதாலா கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இடதுசாரிகள் தற்போது அரசுக்கு எதிரான அணியில் உள்ளனர். நாட்டில் மதவாதம்தான் மிகப் பெரிய மிரட்டலாக உள்ளது. அது தலையெடுப்பதை சமாஜ்வாடி அனுமதிக்காது என்றார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன்












Click it and Unblock the Notifications