இடதுசாரிகளின் 7ம் தேதி கெடுவை நிராகரித்தது காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜூலை 7ம் தேதிக்குள் தனது நிலையை அரசு தெரிவிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் விதித்த கெடுவை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டது.

அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பான மத்திய அரசின் நிலையை ஜூலை 7ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என இடதுசாரிகள் நேற்று கெடு விதித்தனர். அன்றுதான் பிரதமர் மன்மோகன் சிங் டோக்கியோவில் நடைபெறும் ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்ள கிளம்புகிறார்.

ஆனால் இந்தக் கெடுவை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ அல்லது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியோ யாருடைய கெடுவுக்கும் கட்டுப்பட முடியாது.

சமாஜ்வாடி கட்சியுடன் புனிதமற்றகூட்டணி அமைவதாக சொல்வதை ஏற்க முடியாது. காங்கிரஸ், பாஜக அல்லது இடதுசாரிகள், பாஜக இடையே கூட்டணி ஏற்பட முடியாததைப் போல, சமாஜ்வாடியும், காங்கிரஸும் ஒருபோதும் தீண்டத்தகாத கட்சிகளாக இருந்ததில்லை.

அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சினையில், காங்கிரஸ் கட்சி தனது நிலையிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அளவு கூட நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

எங்களது முக்கிய நோக்கம், நாட்டு நலனுக்காக ஒப்பந்தத்தை அமல்படுத்துவது, அதற்காக கூட்டணிக் கட்சிகளை எங்களோடு அழைத்துச் செல்வது, அரசியல் சட்ட அட்டவணைப்படி குறிப்பிட்ட காலத்தில் தேர்தலை சந்திப்பது ஆகியவைதான்.

தேசிய நலனுக்கான இந்த ஒப்பந்தத்துக்கு தேசிய நலனில் அக்கறை கொண்ட மற்ற கட்சிகளும் மெல்ல மெல்ல ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளன. சமாஜ்வாடி - காங்கிரஸ் உறவு மேலும் விரிவடையும். அது ஒன்றும் இயற்கைக்கு முரணானது அல்ல என்றார் சிங்வி.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+