தாயின் கள்ள காதலனுடன் தங்கைக்கு கல்யாணம்: அண்ணன் தற்கொலை!
நாசரேத்: மகளை தன் கள்ளக் காதலனுக்கே மணம் முடித்து வைக்க முயன்ற தாயைத் தடுக்க முடியாததால் மணமுடைந்து தூக்கில் தொங்கினார் மகன். நெல்லை அருகே நாசரேத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.
நாசரேத் ஜனகராஜ் தெருவை சேர்ந்தவர் கலைச் செல்வன். இவரது மனைவி செல்லத்தாய் என்ற ராணி. இவர்களுக்கு பாக்கியராஜ் என்றொரு மகன் உள்ளார். கலைச்செல்வனை விட்டு சில ஆண்டுகளுக்குமுன் பிரிந்தார் செல்லத்தாய். பின்னர் தங்கத்துரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிசா, ஆஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இதற்கிடையில் மனைவி வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த முதல் கணவர் கலைச்செல்வன் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.
அதன் பிறகு அவரது மகன் பாக்கியராஜ், தாயுடன் இருக்கப் பிடிக்காமல் மதுரையில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். 2 மாதத்திற்கு முன்புதான் பாக்கியராஜ் மீண்டும் ஊர் திரும்பினார்.
ஊரில் தனது தாய்க்கு பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அப்படி கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவர் செல்லத்தாயின் மகள் லிசாவை தனக்கு திருமணம் செய்து தர கேட்டுள்ளார். அதற்கு செல்லதாயும் சம்மதித்துள்ளார்.
இதற்கு பாக்கியராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படவே தங்கை லிசா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த பாக்கியராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications